பிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆணைகளை வழங்கியுள்ளார்.
சென்னையில் உள்ள ஐஐடியில் கடந்த மாதம் பிஎஸ் தரவு அறிவியல் படிப்பு தொடங்கப்பட்டது. இந்த படிப்பில் சேர விரும்புபவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலையில் 10-ஆம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் தேர்ச்சி பெற்றவர்களும், 12-ஆம் வகுப்பு முடித்தவர்களும், கல்லூரிகளில் ஏதேனும் இளநிலை படிப்பை படித்து வருபவர்கள் என அனைவரும் இந்த படிப்பில் சேரலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 58 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 192 மாணவர்களுக்கு 14 வாரங்கள் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் பிஎஸ் பட்டப்படிப்பில் சேர்வதற்கான தகுதி தேர்வு எழுதினர். இதில் தேர்ச்சி பெற்ற 87 மாணவர்களுக்கு பொய்யாமொழி ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஐஐடியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பின் மகேஷ் 45 பேருக்கு பொய்யா மொழி அதற்கான ஆணைகளை வழங்கினார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது. இந்த படிப்பில் சேரும் மானவர்களுக்கு 75 சதவீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது எங்கள் நோக்கம். அதில் எங்களுக்கு உதவியாக சென்னை ஐஐடி இணைந்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.