Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடடே…. சூப்பர் ஐடியாவா இருக்கே…. “மாணவர்கள் மனசு பெட்டி” வரவேற்பை பெற்ற திட்டம்…!!

அனைத்து பள்ளிகளிலும் கல்விக்கு இடையூறாக இருக்கும் பிரச்சனைகளை தெரிவிக்க மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

மாணவ-மாணவிகளின் கல்விக்கு பாலியல் ரீதியான தொல்லைகள், சமூக மற்றும் குடும்ப பிரச்சனைகள் உள்பட பல்வேறு பிரச்சனைகள் இடையூறாக நிற்கின்றன. அதிலிருந்து விடுபட்டு நல்வழிபடுவதற்கு மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவ-மாணவிகள் வாழ்க்கை மற்றும் கல்விக்கு இடையூறாக இருக்கும் பிரச்சனைகளை எழுதி அந்த பெட்டியில் போடலாம். இந்த புகார்களை எடுத்து விசாரிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து புகார் அளிக்கும் மாணவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்பதால் இந்த திட்டம் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |