Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடடே….! சூப்பர் ஐடியா….. பாலித்தீன் பயன்பாட்டை தடுக்க வனத்துறையினரின் புதிய ஏற்பாடு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பட்டாம்பூச்சி பூங்கா, மூலிகை நாற்று பண்ணை, ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பாலிதீன் பைகளில் தின்பண்டங்களை எடுத்து சொல்கின்றனர். சிலர் அத்துமீறி மது பாட்டில்களையும் கொண்டு செல்வதால் ஆழியாறு பகுதியில் இருக்கும் வனத்துறை சோதனை சாவடியில் வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் கண்காணிப்பையும் மீறி சிலர் பாலிதீன் பைகளை கொண்டு சென்று தின்பண்டங்களை சாப்பிட்ட பிறகு சாலையோரங்களிலும், வனப்பகுதியிலும் அவற்றை வீசி செல்வதால் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு, சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்கின்றனர். பின்னர் அதில் இருக்கும் திண்பண்டங்களை காகித பையில் மாற்றி கொடுக்கின்றனர்.

Categories

Tech |