பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பல நிறுவனங்களும் கண்டுபிடித்து வருகின்றன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த நெக்ஸூ நிறுவனம் ரோட்லர்க் என்ற எலக்ட்ரிக் சைக்கிள அறிமுகம் செய்துள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் நூறு கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும். இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் BLDC 250W, 36V மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. பெடல் அசிஸ்ட் மோடில் இந்த எலக்ட்ரிக் சைக்கிள் 100 கிலோமீட்டர் ரேஞ்சு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.