Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

அடடே சூப்பர்!!…. ஒரு தடவை சார்ஜ் போட்டால் போதுமா?… 300 கி.மீ-க்கு மேல் போகும்…. புதிய இ-ஸ்கூட்டர் அறிமுகம்…..!!!!!

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த புதிய தகவலை வெளியிட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் போட்டால் 300 கிமீ-க்கும் மேல் செல்லும் என கூறபடுகிறது. கடந்த 2021 ஆகஸ்ட் 15 அன்று ஓலா நிறுவனத்தின் எஸ்1 & எஸ்1 ப்ரோ மற்றும் சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்ற டிசம்பர் முதல் ஓலா நிறுவனம் தன் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய துவங்கியது. ஆனால் பல்வேறு நுகர்வோர் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களின் அம்சங்கள் மற்றும் தரம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் பெங்களூரை தளமாகக் கொண்ட எலக்ட்ரிக் வாகனம் தயாரிப்பாளரான சிம்பிள்எனர்ஜி-யின் சமீபத்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அப்டேட்டின் விளைவு தான் இந்த longer range சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகமாகும். சிம்பிள்எனர்ஜி அதன் ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான சிம்பிள்ஒன்-க்கு கூடுதல் பேட்டரி பேக் ஆப்ஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு தடவை சார்ஜ் செய்தால் 300+ கிலோ மீட்டர் தூரத்தை இது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஜூன் மாதத்தில் டெலிவரிகள் தொடங்கவுள்ள நிலையில், ஆர்வம் இருப்பவர்கள் ஃபைனல் பேமென்ட்டின்போது கூடுதல் பேட்டரி பேக் விருப்பத்தை (additional battery pack option) தேர்வு செய்ய முடியும்.

அதாவது 1.6 kWh திறனுள்ள பேட்டரி பேக், சிம்பிள் ஒன் ஸ்கூட்டரானது 300+கி.மீ என்ற தூரத்தினை கடக்க உதவும் என்றும் ரூ.1,947 என்ற விலையில் முன்பதிவு செய்யலாம் மற்றும் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் மேம்படுத்தல்கள் வருகிற வாரங்களில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் அப்டேட்டில் அதிகரித்த மைலேஜை தவிர்த்து மேலும் அதிக செயல்திறனுக்காக 72Nm பீக் டார்க்குடன் அதிக சக்தி வாய்ந்த மின்சார மோட்டாரும் சேர்க்கப்பட்டுள்ளது. சிம்பிள்ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சமீபத்திய புதுப்பித்தலுடன் மிக சுவாரஸ்யமான கூற்றுகளில் ஒன்று, சிம்பிள் ஒன்னிலுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 8.5kW பவரையும், 72Nm பீக் டார்க்கையும் உருவாக்கும் அதே நேரத்தில் 96% செயல்திறனை நிர்வகிக்கும் திறன் கொண்டுள்ளது.

சிம்பிள்எனர்ஜி தகவலின் அடிப்படையில் ஒரிஜினல் வேரியன்ட் 2 பேட்டரி பேக்குகளைப் பயன்படுத்துகிறது, ஒரு நிலையான பேட்டரிபேக் மற்றும் 2வது நீக்கக்கூடிய மற்றும் கையடக்க பேட்டரி பேக் ஆகும். இதில் நிலையான பேட்டரிபேக் 3.2kWh பேட்டரி பேக் மற்றும் ஒரிஜினல் வேரியன்ட்டின் பேட்டரி பேக்கின் மொத்த திறன் 4.8kWh என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது புதுசாக அறிமுகம் செய்யப்பட்ட வேரியன்ட் 2 நீக்ககூடிய பேட்டரி பேக்குகளை கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் போட்டால் 300+ கி.மீ தூரம் வரையிலும் போகும் சிம்பிள்ஒன் ஸ்கூட்டரின் புது வேரியண்ட் ஆகும். சிம்பிள்ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒரிஜினல் வேரியன்ட் விலையானது ரூபாய் 1.09 லட்சம், அதே நேரம் கூடுதல் பேட்டரிபேக் உள்ள புதிய வேரியன்ட்டின் விலையானது ரூபாய் 1.45 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.

இதற்கிடையே இந்த புதிய பேட்டரி பேக் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிம்பிள் எனர்ஜியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சுஹாஸ் ராஜ்குமார், Simple One-ஐ நாங்கள் தயாரித்தபோது, யூஸர்கள் ரேஞ்ச் அல்லது சார்ஜிங் பற்றி கவலைப்படாமல் இருக்க போதுமான ரேஞ்சை வழங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்குவதற்கான நோக்கத்தை கொண்டிருந்தோம். அதன்படி கூடுதல் பேட்டரியை அளிப்பது எந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனமும் அடைய முடியாத இடங்களைச் சென்றடைய, மின்சாரம் பயன்படுத்துபவர்களை அனுமதிக்கும். எனவே இது சிம்பிள் எனர்ஜிக்கு மட்டுமின்றி EV துறைக்கும் ஒரு பெரிய மைல்கல்”என்று கூறினார்.

Categories

Tech |