சென்ற 2019 ஆம் வருடம் மலையாளத்தில் இயக்குனர் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ரொமான்டிக் திரில்லர் படம் “இஷ்க்”. இப்போது இத்திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தை ஜீரோ புகழ் ஷிவ் மோஹா இயக்குகிறார். இந்தபடத்தில் நடிகர் கதிர் கதா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யபாரதி நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்த படத்திற்கு 1995ஆம் வருடம் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் சுவலஷ்மி நடிப்பில் வெளியாகிய “ஆசை” படத்தின் டைட்டிலை வைத்து இருக்கின்றனர்.
Super happy to present the First Look of upcoming romantic thriller #Aasai
It’s sometimes upside down & U never know what comes up next#EaglesEyeproduction@am_kathir @divyabarti2801 @shivmohaa @shamna_kkasim @linga_offcl @revaamusic @DoneChannel1 pic.twitter.com/MT3Zuuuhnq
— VigneshShivan (@VigneshShivN) September 21, 2022
இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் தங்களுடைய சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். பர்ஸ்ட்லுக் போஸ்டரில் கதிர் மற்றும் திவ்யபாரதி இரண்டு பேரும் ஒருவரையொருவர் முத்தமிடுவது போல் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் இப்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன் இந்த படத்தில் நடிகை பூர்ணா, லிங்கா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ரேவா இசையமைக்கிறார். பாபுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். பின் சுதர்சன் படத்தொகுப்பு செய்கிறார்.