Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்…. கூகுள் மேப்பில் இப்படி ஒரு வசதியா?…. அசத்தலான புதிய அப்டேட்….!!!!

கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் செயலி மூலமாக நாம் இந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை இறுதியில் தெரிந்துகொள்ளலாம். இந்த செயலியில் புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதன்படி கூகுள் மேப்பில் இனி எங்கெல்லாம் டோல்கேட் உள்ளது என்று காட்டப்படும். அதன்மூலம் நாம் காரில் பயணம் செய்ய எவ்வளவு செலவாகும் என எளிதில் தெரிந்து கொள்ளலாம். இந்த சிறப்பு அம்சம் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அடுத்து படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் இது வழங்கப்படும்.

அதனைப் போல டோல்கேட் இல்லாத சாலையை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் மேப்பில் புதிய வசதி இடம்பெறும். அதனைப் போலவே சாலைகளில் உள்ள சிக்னல் களும் நமக்கு தெரியும். அதில் சிவப்பு சிக்னல் போடப்பட்டுள்ளதா, பச்சை சிக்னல் போடப்பட்டு உள்ளதா என நாம் தெரிந்து கொள்ளலாம். மற்றொரு அம்சத்தில் சாலையில் உள்ள கட்டிடங்களின் அமைப்புகள் துல்லியமாக காட்டப்பட உள்ளது. இதன் மூலமாக நாம் செல்லக்கூடிய சாலை எந்த நிலையில் உள்ளது என்பதை எளிதில் காண முடியும்.

Categories

Tech |