Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. கோபம் வரும் ரோபோ… 13 வயது சிறுவனின் அசத்தல் சாதனை…!!!!!!

சென்னையில் 13 வயது சிறுவன் ரஃபிக் என்னும் ரோபோ செய்து சாதனைப்படுத்துள்ளார்.

சென்னை கே ஆர் எம் பள்ளியில் பயின்று வரும் 13 வயது மாணவன் பிரதிக். இவருக்கு சிறுவயதிலிருந்தே விண்வெளி ஆராய்ச்சி, ரோபோடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போன்றவைகளில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. இந்த நிலையில் ரஃபிக் என்னும் பெயர் கொண்ட கோபம் வரக்கூடிய ரோபோவை அவர் தயாரித்திருக்கிறார். இந்த ரஃபிக்  ரோபோவை எதிர்காலத்தில் ஹூமனோய்டாக கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக கூறிய அவர், இந்த ரோபோவுக்கு கோபம் எனும் உணர்ச்சி  மட்டுமே இருக்கிறது. எதிர்காலத்தில் சோகம், மகிழ்ச்சி போன்ற பல உணர்ச்சிகளையும் கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த ரோபோ பற்றி அவர் பேசும்போது கணினி, ராக்கெட்டரி, விண்வெளி, டெக்னாலஜி, எத்திக்கல் ஹேக்கிங் போன்றவற்றில் எனக்கு ஆர்வம் அதிகம். நான் சிறு பிள்ளையாக இருக்கும்போதே புத்தகங்களில் விஞ்ஞானிகளை பற்றி பார்ப்பேன் அவர்கள் செய்யும் வேலைகளை பார்ப்பேன். இதன் மூலமாக அந்த துறையின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதன் பின் படிப்படியாக அடிப்படை முதல் கற்றுக் கொண்டேன் ஆழமாகவும் கற்றுக் கொண்டேன் அதனால் அறிவியல் தாண்டி மற்றவை மீதும் ஆர்வம் ஏற்பட்டது. விண்வெளி நிறுவனமான இஸ்ரோ அல்லது நாசாவில் பணிக்கு செல்ல ஆசை என கூறியுள்ளார். அடிப்படையில் இருந்து ரோபோ செய்ய ஆரம்பித்ததாக கூறும் இவர் ஆரம்பிக்கும்போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது வீட்டில் எனக்கு ஒத்துழைப்பு அதிகம் எனது பள்ளியிலும் ஒத்துழைப்பு தருவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரது தாயார் பேசும் போது சிறுவயதிலிருந்தே ஏதாவது செய்து கொண்டிருப்பான் என்ன செய்கிறான் என்பது தெரியாது. ப்ரோக்ராமிங் எல்லாம் எங்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு வடிவமாக பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது அதன்பின் நாங்கள் ஒத்துழைப்பு அளிக்க தொடங்கினோம். இஸ்ரோ நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். மேலும் தனியாக எதற்கும் படிக்க வைக்கவில்லை இணையம், யூடியூப் போன்றவைகளை பார்த்தே கற்றுக் கொண்டான் என பெருமிதமாய்   கூறியுள்ளார்.

Categories

Tech |