பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. இவர் விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இவர் மருத்துவ படிப்பு படித்துள்ள நிலையில், சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சிறு வயது முதலே நடனம், பாடல் என அனைத்தையும் கற்றுக்கொண்டுள்ளார். அதன்பிறகு நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்த விருமன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
https://www.instagram.com/reel/CiPtvqGB8ul/?utm_source=ig_embed&utm_campaign=loading
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அதிதி சங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது அதிதி விருமன் பட சூட்டிங் ஸ்பாட்டில் சாண்டி மாஸ்டருடன் ஆடியோ குத்து டான்ஸ் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.