மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னுடைய மகனை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 26-ஆம் தேதி மாவட்ட கண்காணிப்பாளராக ஹரி கிரண் பிரசாத் என்பவர் பதவியேற்றார். இவருக்கு 5 வயதில் நிஷ்விக் என்ற மகன் இருக்கிறார். நாகர்கோவில் மாநகராட்சியில் கவிமணி அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தனது மகன் நிஷ்விக்கை காவல் ஆய்வாளர் சேர்த்துள்ளார்.
அதாவது தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது. இதை மக்களுக்கு உணர்த்தும் விதமாகவே எனது மகனை அரசு பள்ளியில் சேர்த்துள்ளேன் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். மேலும் அனைத்து மக்களும் தங்களுடைய குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவும் கூறினார்.