Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. சிறுதானிய உணவுகளுக்கு புதிய திட்டம்…. நபார்டு வங்கி அறிவிப்பு….!!!!

இந்திய நபார்டு வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் விவசாயிகள் திணை, வரகு, சோளம், கம்பு, ராகி போன்ற சிறுதானிய பயிர்களை அதிக அளவில் பயிரிட்டனர். அது தமிழர்களின் பாரம்பரிய உணவாகவும் இருந்தது. ஆனால் தற்போது மக்கள் அரிசியை உணவாக சாப்பிடுகின்றனர். மேலும் துரித வகை உணவுகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இவற்றை சாப்பிடுவதால் மக்களுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மீண்டும் பழங்கால தமிழர்கள் பயிரிட்ட சிறுதானிய உணவு வகைகளுக்கு  திரும்பி வருகின்றனர். ஆனால் தரமான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இந்த குறைபாட்டை போக்குவதற்காக நமது தமிழக அரசு தனது வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் சிறுதானிய இயக்கம் 12.44 கோடியில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுடன் செயல்படுத்தப்படும் என்று வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தார். அதனை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தை முழுவீச்சில் செயல்படுத்துவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்கும் பணியானது மத்திய அரசு நபார்டு வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் எந்த பகுதிகளில் சிறுதானியங்கள் அதிக அளவில் விளையும்  உள்ளிட்டவை குறித்து வரைபடங்கள் மூலம் விளக்கி அறிக்கை தயாரித்துள்ளது.

Categories

Tech |