Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடடே! சூப்பர்….. சிலிண்டர் பணத்தில் 80% மிச்சம்….. புகை, கரி இல்லாத ஹைட்டெக் அடுப்பு….. தமிழக இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் பகுதியில் சாய் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் 15 வருடங்கள் பணியாற்றியுள்ளார். அதன்பின் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பத்தால் சாய் அருண் தனது சொந்த ஊரான விண்ணமங்கலம் பகுதிக்கு வந்தார். அங்கு இன்விக்டி பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் நவீன விறகு அடுப்புகள் உற்பத்தி செய்யப்பட்டுகிறது.

அதாவது எரிவாயு சிலிண்டருக்கு பதிலாக விறகு அடுப்புகளால் ஏற்படும் மாசு போன்றவற்றை தடுக்கும் விதத்தில் நவீன விறகு அடுப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அடுப்பு 4000 முதல் 6000 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அடுப்பை இந்தியா மட்டுமின்றி, ஆப்பிரிக்கா ஜாம்பியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார். இந்த அடுப்பு குறித்து சாய் அருண் பேசியதாவது, நவீனஅடுப்பின் மூலம் மிக சீக்கிரமாக சமைத்து விடலாம். இந்த அடுப்பை வாங்குவதால் எரிவாயு சிலிண்டர் வாங்கும் பணத்தில் 80 சதவீதத்தை மிச்சப்படுத்தலாம்.

இந்த நவீன விறகு அடுப்புகளுக்கு 10 ஆண்டுகள் வரை உத்திரவாதம் கொடுக்கப்படுகிறது. இந்த விறகு அடுப்பை தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் விறகு அடுப்பு பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது என்பதால் அதை தடுப்பதற்கான விதிமுறைகள் விதித்து வருகிறது. நவீன அடுப்பின் மூலம் புகை மற்றும் கரி ஏற்படுவதை தவிர்த்து மாசு ஏற்படுவதை குறைக்கலாம். மேலும் நவீன பிறகு அடுப்பில் சமைக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு எவ்வித கேடும் ஏற்படாது என்றார்.

Categories

Tech |