பிரபல விமான நிலையம் இன்னும் அழகு படுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 2.5 லட்சம் சதுர அடியில் வாகன நிறுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்தி 150 கார்களை நிறுத்த முடியும். மேலும் சாலை, ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்ற இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனம் நிறுத்தும் மையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் வகையில் 5 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சார்ஜ் செய்வதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கு முன்பதிவு செய்ய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட வுள்ளது.
இந்த மையம் ஏற்கனவே சோதனை முறையில் ஆய்வுக்குள்படுத்தப்பட்டது. இந்நிலையில் வாகனம் நிறுத்தும் மையத்தோடு உள்ள வணிக வளாகத்தில் 5 மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகள், சிறுவர்கள் விளையாடும் பகுதிகள், உணவகங்கள் போன்ற பல வசதிகள் அமைந்துள்ளது. இந்த மையம் அடுத்த மாதம் 4-ஆம் தேதி செயல்பாட்டிற்கு வருகிறது. இதுகுறித்து விமான நிலைய ஆணையம் கூறியதாவது. இந்த மையம் செயல்பட தொடங்கியதும், தற்போது தரைதளத்தில் உள்ள வாகனம் நிறுத்துமிடம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அழகுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் விமான நிலையத்தின் அழகு இன்னும் அதிகரிக்கும் என கூறியுள்ளது.