Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… டெஸ்லா காருக்கு சூரிய சக்தி மூலம் சார்ஜ்… புதிய திட்டம்…!!!!!!

சூரிய சக்தி மின்சாரம் மூலமாக டெஸ்லா கார் சார்ஜ் ஏற்றி இயக்க சோதனை செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் சுமார் 15 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு சூரிய மின்சக்தி மின்சாரம் மூலமாக டெஸ்லா  காரை  சார்ஜ் ஏற்றி சோதனை செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டிருக்கின்றனர். வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கின்ற  சோதனை ஓட்டத்தில் பாயைப் போல சுருட்டி எடுத்துக்செல்லும்  வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன பிரத்யேக  சோலார் பேனல்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது.

மேலும் சோதனை ஓட்டத்தின் போது பகல் நேரங்களில் எங்கெல்லாம் காரின் பேட்டரிக்கு சார்ஜ் தேவைப்படுகிறதோ அப்போது காரை நிறுத்தி, இந்த சோலார் பேனல்களை விரித்து சார்ஜ் ஏற்றி  விட்டு தொடர்ந்து பயணம் செய்யலாம் என இந்த பிரிண்டட் சோலார் பேனல்களை உருவாக்கியிருக்கின்றன விஞ்ஞானி பால் டஸ்டூர் கூறியுள்ளார்.

வழக்கமான சோலார் செல்கள் இயற்கையாக கிடைக்கும் சிலிக்கனிலிருந்து தயாரிக்கப்படுகின்ற நிலையில், இந்த சோலார் செல்கள் இயற்கையாக கிடைக்கும் பாலிமர் வேதிப்பொருட்களை மைய்யாக மாற்றி பிளாஸ்டிக் போன்ற எளிதில் மடங்கும் பொருட்கள் மீது அச்சிடப்படுகிறது. மேலும்  இந்த மீது சூரிய ஒளி படும் போது மின்சாரம் உருவாகின்றது.

Categories

Tech |