Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தங்க நாணயம்….அசத்தலான அறிவிப்பு….!!!!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் அருகே கோவளம் ஊராட்சியில் கடந்த மே மாதம் கோவிட் வார் ரூம் திறக்கப்பட்டது. இங்கு அனைத்து மக்களுக்கும் 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம் கோவிட் இல்லா கோவளம் என்ற தலைப்பில் எஸ்.டி.எஸ் பவுண்டேஷன் நிறுவனர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாம் மூலம் 6,500 நபர்களுக்கு இரண்டு கட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், தங்க நாணயம், பிரியாணி, ஸ்கூட்டர், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற  பரிசுப்பொருட்களை வழங்குவதாக எஸ்.டி.எஸ் பவுண்டேஷன் அறிவித்திருந்தது. அதன்படி தடுப்பூசி முகாம் முடிவடைந்த நிலையில் குலுக்கல் முறையில் பரிசு பெற்ற 7 நபர்களுக்கு ஸ்கூட்டர், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், தங்க நாணயம், கேஸ் அடுப்பு, கிரைண்டர், மிக்ஸி போன்றவைகள் வழங்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் 2 தவணை தடுப்பூசிகளை கோவளம் ஊராட்சியில் செலுத்திய எஸ்.டி.எஸ் பவுண்டேஷன் முதலிடத்தை பிடித்துள்ளது.

Categories

Tech |