பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல்வர் நடித்துள்ளார்.
இந்தியாவில் முதல் முறையாக 44-வது செஸ் ஒலிம்பியால் போட்டி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 180 நாடுகளைச் சேர்ந்த 2500 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர்.
இதன் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார். இதுதொடர்பாக விளம்பரம் ஒன்றினை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த விளம்பர படத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடித்துள்ளார். இந்த படப்பிடிப்பானது சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தில் நடைபெற்றதால் போக்குவரத்தானது மாற்றப்பட்டது.