16ஆவது சட்டப் பேரவையின் இரண்டாவது நிதிநிலை அறிக்கை தாக்கல் கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கலும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் துபாஷ் என்ற பெயருடன் அழைக்கப்படும் இந்த பொறுப்பு சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும்போது முன்னே செல்வார்.
அதன்பின் சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியே காத்திருப்பார். மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது அவருடன் செல்வார். சட்ட மன்ற அலுவலகத்தில் உதவியாளராக 1990 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்கு தற்போது வயது 60 தொட்டிருக்கிறது. வரும் மே மாதம் ராஜலட்சுமி ஓய்வு பெற இருக்கிறார். இந்நிலையில் இந்த பொறுப்பிற்கு அவர் நியமிக்கப்பட்டிருப்பது அனைவர் மத்தியிலும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்களே இருந்து வந்த நிலையில் முதன் முறையாக பெண் ஒருவர் இந்த பொறுப்பிற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பொறுப்பிற்கு என தனி சீருடையும் வழங்கப்படும். இது ஆண்கள் மட்டுமே அணிந்த இந்த சீருடையை தற்போது அந்தப் பெண்ணும் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இந்த பொறுப்பு இருந்து வந்தாலும் கூட முதன் முறையாக அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் அப்பணியில் ராஜலட்சுமி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.