Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….!! தாம்பரம் டூ நாகர்கோவில் … ரயில் பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்….!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அறிக்கை ஒற்றை  வெளியிட்டுள்ளது. அதில் வருகின்ற ஆங்கில புத்தாண்டு விடுமுறை காலத்தில் சில இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி நாகர்கோவில்-தாம்பரம் பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் வருகின்ற 26-ஆம் தேதி முதல் மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று மறுநாள் காலை 7.30  மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயிலில் 2 குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்க படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளி பயன்படுத்தும் வசதி உள்ள பெட்டி ஆகியவை  இணைக்கப்படும்.

Categories

Tech |