Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு சார்பில் திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது வழங்க விண்ணப்பங்களை வரும் 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் சொந்த முயற்சியில் படித்து முன்னேறிய திருநங்கைகளுக்கு 2021-2022-ஆம் ஆண்டிற்கான முன்மாதிரி விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதிற்கு தகுதி பெறுவோர் அரசு உதவி பெறாமல் தானாகவே சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்கவேண்டும். மேலும் குறைந்தது ஐந்து திருநங்கையர் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். அத்துடன் திருநங்கையர் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

இதற்கு தகுதியுள்ள திருநங்கைகள் விண்ணப்பங்கள் மட்டுமே விருதுக்கு பரிந்துரைக்கப்படும். இதனைத்தொடர்ந்து தகுதியுள்ள திருநங்கையர் awardstn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து உரிய ஆவணங்களுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |