சீனாவின் எக்ஸ்பெங்க் எரோத் என்னும் நிறுவனம் ஒன்று மின்சாரத்தில் இயங்கக்கூடிய பறக்கும் விதமான கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. இதனை அடுத்து இந்த கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றது. இதன்படி x2 என பெயரிடப்பட்டிருக்கின்ற இரண்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த பறக்கும் கார் ஒன்று முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றுள்ளது. அப்போது ஒரு மூளைக்கு இரண்டு இறக்கைகள் என மொத்தம் நான்கு மூலைகளிலும் 8 மின்சார இறக்கைகள் இந்த காரில் இணைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் அவை இந்த காரை மேலே எம்ப செய்வதற்கும் தரையில் கீழே இறங்குவதற்கும் உதவியாய் இருக்கிறது. இந்த நிலையில் இந்த காரின் சோதனை ஓட்டம் ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஆளில்லாமல் கார் இயக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது பற்றி எக்ஸ்பெங்க் நிறுவனத்தின் பொது மேலாளர் மின் குவான் க்யூ செய்தியாளர்களிடம் பேசும்போது சர்வதேச சந்தையில் மெல்ல இதனை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கின்றோம். இதற்காக துபாயில் நாங்கள் முதலில் தேர்வு செய்துள்ளோம் ஏனென்றால் உலகின் புதுமையான நகராக துபாய் இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கான பறக்கும் காருக்கான முக்கிய அடித்தளமாக இந்த சோதனை அமையும் என அந்த நிறுவனத்தினர் தெரிவித்து இருக்கின்றனர்.