பிரபல சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.மீனாகுமாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எங்கள் சித்த மருத்துவ நிறுவனத்தில் அடுத்த ஆண்டில் புதிய இளங்கலை சித்த மருத்துவ படிப்பு தொடங்கப்படவுள்ளது. இதற்கு இந்திய மருத்துவ தேசிய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதில் 60 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் நிகழாண்டு நீட் தேர்வுக்கான தரவரிசை பட்டியலில் இருந்து மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெறும். அதற்கான கவுன்சிலிங் விரைவில் தொடங்கும்.
மேலும் அரசு ஒதுக்கீடு செய்திருக்கும் நிலத்தில் புதிய கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே 8 சித்த மருத்துவ பிரிவுகளில் எம் .டி. படிப்பையும், 6 பிரிவுகளில் சித்த மருத்துவ ஆராய்ச்சி படிப்பையும் வழங்கி வருகிறது “என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.