நாகை மாவட்ட வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வது வழக்கம். ஐரோப்பா, சைபீரியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஆண்டு வரை 244 பறவினங்கள் வந்து செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தற்போது வேதாரண்யம் கடலோர கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நிகழாண்டுக்கான வடகிழக்கு பருவ கால தொடங்கும் முன்னரே பறவைகள் வருவது வழக்கம் போல தொடங்கியுள்ளது. இன்று முதல் எதிர்பாராத மழைப்பொழிவு இருந்து வரும் நிலையில் பறவைகளின் எண்ணிக்கையும் திடீரென அதிகரிக்க செய்துள்ளது. மேலும் கோடியக்கரை சரணாலயத்திற்கு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது காண்போரின் கண்களுக்கு இதமாக காட்சியளிக்கிறது.