தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். இவர் நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். பல வருடங்களாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா, ஷாலினி அஜித் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோவை 25 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருந்தது. இந்த திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் Nayanthara beyond the fairy tale என்ற தலைப்பில் ஒளிபரப்ப இருக்கிறது. மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோவின் டீசரை தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Beyond the Fairy tale 💝🫶🏻 coming soon on @NetflixIndia pic.twitter.com/Ye86kjvN9Y
— Nayanthara✨ (@NayantharaU) September 24, 2022