இந்திய அரசு முதல் முதலாக ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தலைவிதியை 2. 39 கோடி வாக்காளர்களின் வாக்குகள் மட்டுமே தீர்மானிக்கிறது. இந்நிலையில் ஜாம்பூர் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு படகு ஓட்டிகளாகவும், வணிகர்களாகவும் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து வந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு தற்போது முதல் முறையாக இந்திய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. இதனால் அவர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். இதற்காக ஜாம்பூர் கிராமத்திலேயே பழங்குடியினர் சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்களுக்கு வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டதை கொண்டாடும் விதமாக கிராம மக்கள் பலவகை உணவுகளை சமைத்தும், பாரம்பரிய நடனங்களை ஆடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.