மனிதர்கள் நிலவில் வாழலாம் என நாசா தெரிவித்துள்ளது.
கடந்த 1969- ஆம் ஆண்டு அமெரிக்கா மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதேபோல் தற்போதும் நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட விண்கலம் மனித மாதிரிகளுடன் கடந்த வாரம் எஸ்.எல்.எஸ். ராக்கெட் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது. இது நாசாவுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகும்.
மேலும் இது குறித்து ஓரியன் விண்கல திட்டத்தின் தலைவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் வருகின்ற 2030-ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் நிச்சயமாக நிலவில் வாழலாம். அதற்காக நாம் ஏராளமான மக்களை நிலவுக்கு அனுப்பப் போகிறோம். இது நாசாவுக்கு வரலாற்று நாள் மட்டுமல்ல விண்வெளி ஆராய்ச்சிகளை விரும்பும் அனைவருக்கும் இன்று சிறந்த நாள். எனவே நாம் மீண்டும் நிலவுக்கு செல்கிறோம். இதற்காகவே நாங்கள் இந்த திட்டத்தை நோக்கி செயல்படுகிறோம் என அவர் கூறியுள்ளார்.