பிரபல ரவுடியான அபிஜீத் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் பிரபல ரவுடியான அபிஜீத் யாதவ் வசித்து வருகிறார். இவர் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதனால் இவரை போலீசார் கைது செய்ய தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் குறித்து தகவல் அளித்தால் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஜார்கண்ட் மாநிலமும், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்தது.
இந்நிலையில் போலீசாருக்கு காயா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் அபிஜீத் யாதவ் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஏகே 56 ரக துப்பாகிகள், 97 தோட்டாக்கள், வெடிப்பொருள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.