கொல்கத்தாவின் கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஒரு பகுதியாக, நாட்டிலேயே முதன்முறையாக ஹூக்ளி ஆற்றில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டவுடன், மெட்ரோ ரயில்கள் வெறும் 45 வினாடிகளில் 520 மீட்டர் நீருக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கப் பாதையை கடந்து சென்று விடும். இந்த கொல்கத்தா சுரங்கப்பாதை ஆற்றுப்படுகையின் கீழ் 13 மீட்டரும், தரைப் பகுதியில் இருந்து 33 மீட்டர் ஆழத்திலும் அமைந்திருக்கிறது.
கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டமானது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த சால்ட் லேக் செக்டார் வி பகுதியை ஹெளரா மைதானத்தை ஹூக்ளி ஆற்றைக் கடந்து இணைக்கவிருக்கிறது. 2023-ம் வருடம் டிசம்பர் மாதம் 2.5 கி.மீ தொலைவுள்ள எஸ்பிளனேடு- சீல்டா இடையிலான வழித்தடம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுவிட்டால் ரயில் இயக்கம் தொடங்கிவிடும் என கூறப்படுகிறது. சுரங்கப் பாதைக்குள் ஆற்றுநீர் புகாத அடிப்படையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி, இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.