சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனில் இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே full-HD+ (1,080×2,408 pixels) ரெஷலியூஷனுடன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனுடன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த போன் Exynos 850 SoC பிராசஸர், OneUI 4.1 ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்ஸில் செயல்படும் என்று கூறப்படுகிறது. கேமராவை பொறுத்தவரையிலும் இதில் f/2.2 அப்பேர்சர் லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் சென்சார், f/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார் கேமராக்கள் வழங்கப்பட இருக்கின்றன.
இதில் முன் பக்கத்தில் 8 மெகாபிக்ஸல் கொண்ட செல்ஃபி கேமரா f/2.2 லென்ஸுடன் வழங்கப்பட உள்ளது. அத்துடன் இந்த போனில் 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த போனில் க்னாக்ஸ் செக்யூரிட்டி மற்றும் சைட் மவுண்டட் ஃப்ங்கர்பிரிண்ட் சென்சாரும் இடம் பெற்றுள்ளது. அதன்பின் இந்த போனின் 4 ஜிபி/64 ஜிபி வேரியண்டின் விலை ரூபாய் 14,999 ஆகவும், 4ஜிபி/128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999-ஆகவும், 6ஜிபி/128 ஜிபியின் விலை ரூ.17,499-ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.