Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!… பள்ளிகளின் வளர்ச்சியில் 2-வது இடம் பிடித்த சிம்லா…. வளர்ச்சித் துறை அமைச்சர் தகவல்….!!!

சிம்லா மாவட்டம் பள்ளி  வளர்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள கிருஷ்ணா நகரில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள் வசதி  செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து  பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மாநிலத்தின் தலைநகரில் அமைந்துள்ள 10 பள்ளிகளில் 33 ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தற்போது சிம்லா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. கடந்த 2  ஆண்டுகளில் மக்கள் மாற்றத்தை உணர முடியும். சிம்லாவின் பள்ளியை தொழில்நுட்பம் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்குவதே எங்கள் முதன்மையான நோக்கம்.

மேலும் நாங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து பள்ளிகளிலும் கிட்டத்தட்ட 3 ஸ்மார்ட் வகுப்புகள் உள்ளது. அதில் கிருஷ்ணா நகர், சோட்டா சிம்லா, காலனி, சஞ்செளலி, தூத்திகண்டி  உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் உள்ளது. இந்த வகுப்பில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் வகுப்புகள்  நடத்தப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |