பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டி தடுக்கப்படும் என முதல்வர் கூறி உள்ளார்.
புதுச்சேரியில் இன்று 7-ம் நாள் சட்டப்பேரவை கூறியது. இந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது திமுக எம்எல்ஏ செந்தில்குமார் தனது தொகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் வீடு இல்லாமல் சிரமப்படுவதாகவும், பல மதங்களாக முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதன் பிறகு அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டி தர வேண்டும் எனவும் கூறினார். இதற்கு அமைச்சர் சந்திர பிரியங்கா நிதி நிலைமையை பொருத்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றார். அதோடு நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு சிவப்பு குடும்ப நல அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அதற்கு எம்எல்ஏ செந்தில்குமார் நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வீட்டு மனை பட்டா வழங்கி வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சிவா வீடு இல்லாத மக்களுக்கு மஞ்சள் குடும்ப நல அட்டை வழங்கியதே தவறு. இந்த ரேஷன் கார்டுகளை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியதோடு, தமிழக அரசு பழங்குடியின மற்றும் நரிக்குறவ மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது போல் புதுச்சேரியிலும் வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு முதல்வர் பழங்குடியினர், இருளர் மற்றும் நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இடங்கள் இருந்தால் அவர்களுக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வீட்டுமனை பட்டாவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் பழங்குடியின மற்றும் நரிக்குறவர் மக்கள் மீது எனக்கு அதிக அக்கறை இருக்கிறது என்றும், அவர்களுக்கு வேண்டிய அனைத்து விதமான உதவிகளையும் செய்து கொடுப்பேன் என்றும் கூறினார்.