Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…!! பாதுகாப்பாக தரையிறங்கிய ஓரியன் விண்கலம்…. நாசா தகவல்….!!!!

நிலவுக்கு அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் பாதுகாப்பான முறையில் தரையிறங்கியுள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா பல ராக்கெட்டுகளை தயாரித்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அதேபோல் மனிதனை நிலவுக்கு  வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் அனுப்ப வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஆளில்லா  ஓரியன் வெண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டது. ஆனால் திடீரென ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் பல தடைகளுக்கு பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  ராக்கெட் மூலம் ஓரியன்  விண்கலத்தை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி தனது பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் பசுபிக் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.

Categories

Tech |