Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…! பிரதமர் மோடி அறிவித்த தீபாவளி GIFT…. செம மகிழ்ச்சியில் இளைஞர்கள்….!!!

இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு பலரும் வேலை இழந்தனர். மேலும் அரசாலும் புதிய வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கி தர முடியாத நிலையில் இருந்தது. இதனை அடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து அனைத்து துறைகளும் மீண்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த ஜூன் மாதத்தில் அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வருகிற 24-ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இந்த தீபாவளி பண்டிகையை இளைஞர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் விதமாக பிரதமர் அவர்கள் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு பரிசு வழங்க உள்ளார்.

அதன்படி நாடு முழுவதும் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 75,000 இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தர உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஏற்கனவே அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என ஜூன் மாதம் தெரிவித்திருந்தார். அதன்படி, உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட துறைகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.

Categories

Tech |