பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை, நடிகராக வலம் வருபவர்கள் ஆலியா பட்-ரன்பீர் கபூர். கடந்த 5 வருடங்களாக காதலித்த ரன்பீரும், ஆலியா பட்டும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே அலியா பட் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து தற்போது ஆலியா பட்டுக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் தங்களுடைய இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகும் நிலையில், அக்டோபர் 28-ஆம் தேதி குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தேதி குறித்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.