பிரித்தானியாவின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவரின் தாயார் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.
பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கால் உள்துறை செயலாளராக சுயெல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் தாயார் ஒரு தமிழ்ப்பெண் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் லீஸ் டிரஸின் அமைச்சரவையில் உள்துறை செயலாளராக இருந்த சுயெல்லா பிரேவர்மேன் தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து நாடாளுமன்றத்தின் நம்பகமான சக ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை பகிர்ந்து கொண்டதாக ஒப்புக்கொண்டார். இந்த தவறுக்காக பதவி விலகுவதே சரியான செயலாக இருக்கும் என கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது ரிஷி சுனக் தலைமையிலான அமைச்சரவையில் விதிமீறலுக்காக பதவி விலகிய சுயெல்லாவை மீண்டும் உள்துறை செயலாளராக நியமித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுயெல்லாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவரது தாயார் தமிழர் என தெரியவந்துள்ளது. சுயெல்லாவின் தந்தை பெயர் Christie Fernandes. அவரின் தாயார் பெயர் உமா இவர் தமிழ்ப்பெண் அவர். இந்நிலையில் உமா மொரிஷியஸிஸ் இருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர் ஆவார்.