Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பிரபல நாட்டில் ” பெண்களின் பல ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…. எதற்கு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!!

பிரபல நாட்டில் பாலியல் பலாத்காரச் சட்டத்தை திருத்தம் செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

உலக பணக்கார நாடுகளில்  ஒன்றாக சுவிட்சர்லாந்   விளங்குகிறது. இந்த நாட்டில்  வாழும் பெண்களை யாரேனும்  கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தாலும், அதற்கு அந்த பெண் புகார் அளித்தால் மட்டுமே அது கற்பழிப்பு குற்றமாக கருதப்படுகிறது. இது அந்த நாட்டின் பாலியல் பலாத்காரச் சட்டத்திலும் இருக்கிறது. இந்த நிலையில்  பாலியல் பலாத்காரச் சட்டத்தில் திருத்தங்கள் தேவை. மேலும்  ஒரு பெண் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும், அவளுடைய சம்மதம் இன்றி பாலியல் வன்புணர்வு செய்வது கற்பழிப்பு  குற்றமாக கருதப்பட வேண்டும். இதனையடுத்து  ஆண், பெண் யாராக இருந்தாலும் பாலியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டால் அது  பாலியல் பலாத்கார சட்டத்தில் கற்பழிப்பு குற்றமாக கருதப்பட வேண்டும் என அந்நாட்டு மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து நேற்று நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது உள்ள பாலியல் பலாத்கார சட்டத்தில் திருத்தங்கள் தேவை என கூறி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் கூறியதாவது “புதிதாக திருத்தப்பட உள்ள சட்டத்தில் ஒருவருடைய அனுமதியின்றி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டால் அதுவும் கற்பழிப்பு குற்றம் என்று சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அது நடைமுறையில் வைப்பது கடினம் என்று கூறிய  பல வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைக்காக நடந்து வரும் பல ஆண்டு போராட்டதிற்கு  கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நாடாளுமன்ற இரு சபைகளிலும் முடிவு எடுக்கப்படும். அதன்பின்னர் நேரடி ஜனநாயக அமைப்பின் கீழ் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பின்னரே இந்த சட்டம் அமலுக்கு வரும்” என அதில் கூறப்பட்டுள்ளது

Categories

Tech |