Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே சூப்பர்…. பீஸ்ட் படத்தை இவங்க பார்த்தாங்களா… வைரலாகும் போட்டோ… யார் தெரியுமா….?

நடிகை ஷாலினி தனது மகளுடன் விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்க்க சென்ற போட்டோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு போன்ற பலர் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கடந்த 15ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் வெளியானது. இந்த நிலையில் பீஸ்ட் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இருப்பினும் முதல் நாளில் வசூல் வேட்டை ஆடிய பீஸ்ட் கோடிகளை குவித்ததாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

இந்த நிலையில் நடிகை ஷாலினி அஜித்குமார் தனது மகள் மற்றும் மகனுடன் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை நேற்று சத்யம் திரைஅரங்கில் பார்த்துள்ளனர். மூன்று பேரும் தியேட்டரில் பீஸ்ட் திரைப்படத்தை பார்த்த போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அஜித் மற்றும் விஜய் இடையே நல்ல நட்பு இருந்து வருகின்ற நிலையில் அவர்களின் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் மோதிக் கொள்கின்றனர்.

இருப்பினும் இரு தரப்பினருமே அடிக்கடி தரம் தாழ்ந்து பேசிக்கொள்கின்றார்கள். இந்நிலையில் ஷாலினி பீஸ்ட் படத்தை பார்த்திருப்பது அவர்கள் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |