Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்… புதிய உலக சாதனை… இரண்டு வயதில் மூன்று மொழி பேசும் குழந்தை…. குவியும் பாராட்டுக்கள்…!!!!!!!

இரண்டு வயது குழந்தை மூன்று மொழி பேச்சு, 2000 பொது அறிவு தகவல் என புதிய உலக சாதனை படைத்து பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்  ஜெகதீசன். அசாம் மாநிலத்தில் இந்திய விமானப் படையில் பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி யாமினி. இவர்களுக்கு 2 வயது குழந்தை அகரமுதல்வன் குழந்தை இருக்கின்றான்.  அகரமுதல்வன் படிப்பில் சுட்டியாக இருப்பது , பொது அறிவு, பாடல், தேசிய தலைவர்கள், தேசியக் கொடி என அனைத்து விதமான தகவல்களை பள்ளிக்கூடம் செல்லாமல் தாய், தந்தையின் தீவிர முயற்சியால் ஆயிரம் வார்த்தைகள் கடந்து குழந்தை அகரமுதல்வன் சாதனை புரிந்ததோடு கலாம் விருதினை தட்டிச் சென்றுள்ளார்.

தற்போது காலகட்டத்தில் பெற்றோர்கள் குழந்தையை வளர்க்க பெரும் சிரமமாகவே இருந்து வருகின்றனர். படுசுட்டி ஆகவே வீட்டையே  இரண்டாக மாற்றி வரும் காலகட்டத்தில் குழந்தைகளை சமாளிக்க முடியாமல் பெற்றோர்கள் பிளேஸ்கூல் அனுப்பி வைத்துவிடுகின்றனர். மேலும் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க வேலைக்காரப் பெண்களையும், வீட்டில் பிள்ளைகள் சமாளிக்க முடியாமல் செல்போனை கொடுத்து குழந்தைக்கு யூடியூப், பப்ஜி  என பல்வேறு விளையாட்டுகளில் நேரத்தை கடத்த சொல்லித் தருகின்றனர்.

இதற்கு விதிவிலக்காக தம்பதியினர் குழந்தை அகரமுதல்வன் தனிக்கவனம் செலுத்தி செல்போன் கொடுக்காமல் படிப்பு பொது அறிவு விளையாட்டு என தனித்தனி ஆர்வத்தை ஊட்டும் வகையில் தங்களது நேரத்தை குழந்தையுடன் ஒதுக்கி குழந்தையின் அறிவை தூண்டும் விதமாக வளர்த்து வருகிறார்கள். மேலும் தந்தை ஜெகதீஷ் பணியாற்றும் வட மாநிலமான அசாமில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இருந்தபோதிலும் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் குழந்தை அகரமுதல்வன் பேசவைத்து மொழிகளை கற்று தந்து வருகின்றார்.

அதற்கு ஏற்றவாறு குழந்தை அகரமுதல்வன் 3 மொழியையும் நன்றாக பேசி வருகின்றார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்னும் பழமொழிக்கு ஏற்ப ஜெகதீஸ் யாமினி தம்பதிகளின் குழந்தை அகரமுதல்வன் இரண்டு வயது 2000 வார்த்தைகளை கடந்து கின்னஸ் சாதனை கலாம் விருதினை பெற்றுள்ளார். இதன் மூலமாக அந்த கிராமத்திற்கு அகரமுதல்வன் பெருமை சேர்த்துள்ளார். இரண்டு வயது குழந்தையின் அசாத்திய சாதனையை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் வியந்து பார்த்து  வாழ்த்து தெரிவித்து செல்கின்றார்கள்.

Categories

Tech |