Categories
சென்னை மாநில செய்திகள்

அடடே சூப்பர்….. புற்றுநோய் உருவாக்கும் அணுக்களை கண்டறியும் கருவி…. சென்னை ஐஐடி அதிரடி….!!!!

புற்றுநோய் கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு கருவி ஒன்றை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்தியில், பொதுவாக புற்றுநோய் என்பது கட்டுப்படுத்த முடியாத ஜீன்களால் உருவாகும் ஒரு ஆபத்தான நோய். இதன் அணுக்கள் பல்கி பெருகுவதால் நோயாளிக்கு கடும் பாதிப்பு ஏற்படுகின்றது. அதனால் புற்றுநோயை உருவாக்கக்கூடிய அணுக்களை முன்கூட்டியே கண்டறியக்கூடிய செயற்கை அறிவு கருவியை சென்னை ஐஐடி கெமிக்கல் இன்ஜினியரிங் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய கருவியானது உடலில் உள்ள மரபணுக்களின் வகைகளை தனித்தனியாக பிரித்து கேன்சர் உருவாக்கும் மரபணுக்கள் இருந்தால் அதனை கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

Categories

Tech |