வேலையில் இருந்து பணி ஓய்வு பெறும் போது மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு என்று பல விதிமுறைகள் உள்ளன. இந்நிலையில் பென்ஷன்தாரர்களுக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஒவ்வொரு ஊழியர்களுக்கும் PF கணக்கு என்ற தனிப்பட்ட கணக்கு இருக்கும். இதன் மூலம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக பிராவிடன்ட் ஃபண்ட் உடன் பென்ஷனுக்கு என்று ஒரு குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த PF கணக்கு மூலம் தேவைப்படும்போது சரியான காரணத்திற்காக அதில் இருந்து ஊழியர்கள் பணம் பெற்றுக்கொள்ள முடியும். அதே போல, பென்ஷன் கணக்கும் இருந்தாலும், அதை பென்ஷன் வாங்குபவர்களே ஹேண்டில் செய்வதற்கான அமைப்பு இல்லை. எனவே, PF கணக்குகள் ஒருங்கிணைப்பதைப் போலவே, ஒரு மத்திய பென்ஷன் விநியோகிக்கும் அமைப்பை உருவாக்குவதாக ஊழியர்கள் வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. அதாவது ஓய்வூதியர்களுக்கு வெவ்வேறு தேதியில் பென்சன் வழங்கும் முறையை மாற்றி அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பென்சன் வழங்குவதை உறுதி செய்வதற்கு ஒரு தனிப்பட்ட பென்ஷன் விநியோகிக்கும் அமைப்பை கட்டமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய அமைப்பின் கீழ் பிராந்திய அலுவலகங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்றும் என்றும், ஒரே நேரத்தில் 73 லட்ச ஓய்வூதியதாரர்களுக்கு அவரவர் வங்கி கணக்குகளில் ஓய்வூதிய தொகை செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. கடந்த மாதம், பென்ஷன் மற்றும் பென்ஷன் வாங்குபவர்கள் நல சங்கம், இந்த ஒருங்கிணைந்த பென்ஷன் வழங்கும் அமைப்பிற்கு, SBI உடன் இணைத்து செயல்படும் என்று கூறப்பட்டது. அதே போல, ஆண்டு தோறும் வழங்க வேண்டிய லைஃப் சர்டிபிகேட்டை டிஜிட்டல் தளம் வழியாகவும், முகம் வழியே உறுதிப்படுத்தல் செயல்முறையும் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.