இந்திய அஞ்சல் துறையின் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் ஆண் குழந்தைகளுக்கு சேமிக்கக் கூடிய வகையில் ‘பொன்மகன்’ சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ரூ.500 செலுத்த வேண்டும். எனவே இந்த திட்டத்தில் நடுத்தர மக்கள் பெருமளவு இணைகிறார்கள். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். மேலும் இதில் 10 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் ஜாயின்ட் மூலமாக சேமிப்பு கணக்கை தொடங்கலாம். ஆனால் 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் அவர்கள் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும்.
இந்தத் திட்டத்தில் இணைவதற்காக குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி சான்றாக ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் குழந்தையின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை கொண்டு வந்து சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும். இதற்கான வட்டி விகித 7.6% வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாக உள்ளது. ஆனால் தங்களது தேவைக்கேற்ப 5 ஆண்டுகாலம் நீட்டித்துக் கொள்ளலாம். மேலும் அவசர தேவைகளுக்கு இந்த திட்டத்தில் இருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 முதலீடாக செலுத்தினால் முதிர்வு காலத்தில் ரூ.5,27,446 தொகை கிடைக்கும். இதனால் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.