“மை ஏர்போர்ட் செல்பி” என்ற போட்டியில் கலந்துகொள்ள வரும் 22ஆம் தேதிக்குள் போட்டோக்கள் அனுப்பலாம் என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது.
விமான நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் செல்பி என்ற சுய புகைப்படம் எடுத்தவர்களுக்காக “மை ஏர்போர்ட் செல்பி போட்டோ” வாரப் போட்டியை, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் அறிவித்துள்ளது. விமானத்தில் பயணம் செய்ததில், எந்த விமான நிலையம் நினைவில் நின்றது என்பதை குறிக்கும் விதமாக விமான நிலையத்தில் எடுத்த செல்பியை 90421 40030 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்ப வேண்டும். இந்த போட்டியில் கலந்துகொள்ள வருகிற 22ம் தேதிக்குள் செல்பி போட்டோக்களை அனுப்ப வேண்டும். இது குறித்த மேலும் விபரங்களை, www.aai.aero என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்