இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன், வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் சேமிப்பு திட்டங்கள் செய்பவர்களுக்கு சேமிப்பு தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேமிப்பு திட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள அதிக மக்கள் அஞ்சலக திட்டங்களில் அதிகம் சேமித்து வருகின்றனர். காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமான திட்டங்கள் ஆகிய திட்டங்கள் எதிர்கால சேமிப்புக்கு உத்தரவாதத்தை அளிக்கிறது. ஒவ்வொரு திட்டங்களுக்கும் தனித்தனி விதிமுறைகள் மற்றும் கால அளவும் உள்ளது.
மேலும் போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் ரூ.500 இருந்தாலே போதும் எளிதாக கணக்கு தொடங்கலாம். தற்போது ஆன்லைன் மூலமாக எளிதாக கணக்கு தொடங்கும் வசதி உள்ளது. இந்நிலையில் மற்ற திட்டங்களை தொடர்ந்து தேசிய சேமிப்பு தொடர் வைப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளத. இந்த சேமிப்பை தொடங்க ரூ. 100 இருந்தால் போதும். அதனைத் தொடர்ந்து வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ரூ.500 செலுத்தி கணக்கை தொடங்கலாம் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் குறைந்தபட்சம் இருப்பு தொகை ரூ.250 ஆகும். இதனைத் தொடர்ந்து தேசிய சேமிப்பு பத்திரத்தில் ரூ.1000 செலுத்தி கணக்கு தொடங்கலாம். இதில் ரூ1,000 முதல் முதலீடு செய்யலாம். அதன்பிறகு கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்தில் ரூ.1000 இருந்தாலே கணக்கை தொடங்கலாம். இந்த அனைத்து சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு மிக உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.