மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக புதிதாக சிற்பி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் வைத்து சிற்பி என்னும் புதிய திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் சென்னையில் உள்ள 100 மாநகராட்சி பள்ளிகளில் இருந்து தலா 50 மாணவர்களை தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . இந்த திட்டம் பெருகிவரும் குற்ற செயல்களை தடுக்கவும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் செயல்படுத்தப்படுகிறது.
இதில் 8-ஆம் வகுப்பு முதல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தனி சீருடை வழங்கப்படும். மேலும் மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லுதல், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து சென்று அவர்களின் திறன்களை மேம்படுத்துதல், சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக அவர்களை மாற்றும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து சட்ட கல்வி அறிவு பெற செய்தல் போன்றவை திட்டத்தில் அடங்கும். மேலும் மாணவர்களுக்கு காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண், காவலன் செயலி, முதியோர் உதவி எண் உள்ளிட்ட அவசர எண்கள் குறித்து கற்று கொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.