Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடடே! சூப்பர்….. மாமல்லபுரம் கடற்கரை கோவிலை சோப்பால் செதுக்கிய ஆசிரியர்….. குவியும் பாராட்டு….!!!!

மாமல்லபுரம் கடற்கரை கோவிலை வடிவமைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருக்கிறது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த செஸ் போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்று சிறப்பாக நிறைவடைந்துள்ளது.

இந்த போட்டியை நினைவுபடுத்தும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி வைர விழா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் மன்சூர் அலிகான் தன்னுடைய சொந்த முயற்சியால் ஒரு படைப்பை உருவாக்கியுள்ளார். அதாவது மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவிலை சோப்பை வைத்து வடிவமைத்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணமாக இருக்கிறது.

Categories

Tech |