Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே சூப்பர்…! முதல்முறையாக ஜோடி சேரும் சிம்பு – கீர்த்தி சுரேஷ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் தற்போது டாப் நடிகர்கள் மற்றும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்கள் சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ். இவர்கள் இரண்டு பேரும் ஒரு திரைப்படத்தில் சேர்ந்து நடிப்பார்களா என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி கே ஜி எஃப் திரைப்படங்களை தயாரித்த Hombale films நிறுவனம் தயாரிக்க இருக்கின்ற திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க இருக்கின்றார். 2023 ஆம் வருடம் இறுதியில் தொடங்க இருக்கும் அந்த திரைப்படத்தில் சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சூர்யாவின் திரைப்படத்தை முடித்த பின் சுதா கொங்கரா இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் பற்றிய அறிவிப்பு தீபாவளியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |