Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. முதியவர்களுக்கு துணை…. டாடாவின் புதிய முதலீடு…..!!!!!

மூத்த குடிமக்கள் தங்களுக்கென ஒரு துணையை தேடும் சேவையை “குட்ஃபெல்லோஸ்”என்ற நிறுவனம் வழங்குகிறது.சாந்தனு நாயுடு எனும் 25 வயது இளநரால் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் தொழில் அதிபர் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார். டாடா குழும பணிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ரத்தன் டாடா பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொண்டு, அவற்றை ஆதரித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் மூத்த குடிமக்களுக்கு பணியாற்றும் குட் பெல்லோஸ் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இருப்பினும், அவர் எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. முதியவர்களையும் இளைஞர்களையும் இணைக்கும் பாலமாக இது இருக்கும் என டாடா தெரிவித்துள்ளார். புனேவை தொடர்ந்து சென்னை மற்றும் பெங்களூரில் இந்த நிறுவனம் விரிவு படுத்துகிறது.

Categories

Tech |