கோவை மாநகராட்சி திமுக மேயராக கடந்த பிப்ரவரி மாத பதவியேற்றி கொண்டவர் கல்பனா ஆனந்தகுமார். இவருக்கும் தொடக்கத்தில் அரசு அதிகாரிகளுடன் மோதல் போக்கு இருந்து வந்தது. அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி தலையீட்டால் முடிவுக்கு வந்தது. கோப்புகள் தொடர்பான விஷயத்திலும் முடிவு எடுப்பதில் காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கட்சி தலைமை நம்பிக்கை அளிக்க வேகம் கூடியது. தற்போது நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதில் ஆகட்டும், கோப்புகளை சரி பார்ப்பதில் ஆகட்டும், அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவது, மாநகராட்சி அளவிலான பிரச்சனைகளை தீர்ப்பது என தீயாய் வேலை செய்ய தொடங்கி விட்டார்.
இந்நிலையில் மேயராக தனது முதல் தீபாவளியை கொண்டாட கல்பனா ஆனந்தகுமார் தயாராகி வருகிறார். அதாவது, கோவை பூ மார்க்கெட் பகுதியில் சாய் கண்ணன் என்பவர் புதிதாக பட்டாசு கடை திறந்து உள்ளார். அங்கு சிறப்பு விருந்தினராக கோவை மேயர் கலந்துகொண்டார். அப்போது ஏழை குழந்தைகளை வரவழைத்து அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினார். இதற்கான முடிவை கல்பனா தான் எடுத்ததாக மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. தனது சொந்த செலவில் ஏழை குழந்தைகளின் தீபாவளி பண்டிகையை சிறப்பான வகையில் நடவடிக்கை எடுத்திருக்கிறார். மேலும் பல தரப்பினரும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.