Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்… யூடியூபில் படிக்க ஈஸியான வழி…? அறிமுகமாகும் புதிய வசதிகள்…!!!!!!

சமூக ஊடகமான யூடியூப் தளத்தில் பொழுதுபோக்கு, செய்திகள், விளையாட்டு போன்ற பல துறைகள் சார்ந்த ஏராளமான வீடியோக்கள் இருக்கிறது.  youtube இல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 500 கோடி வீடியோக்கள் பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் அண்மைக்காலமாக யூடியூபில் கல்வி சார்ந்த வீடியோக்களுக்கு  வரவேற்பும் அதிகரித்திருக்கிறது. தினமும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதற்காக பலரும் யூடிபிற்கு வருகை தருவதாக அந்த நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகின்றது அதனால் கல்வி சார்ந்த விஷயங்களுக்கான சில புதிய அப்டேட்களை youtube வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி கல்வி சார்ந்த வீடியோக்கள் முன்பை விட எளிதாகவும் கற்பதற்கு ஏற்ற விதமாகவும் இருக்கும் என கூறப்படுகின்றது.

இது பற்றி youtube லானிங் பிரிவு இயக்குனர் ஜானதன் கஸ்மண் ஒவ்வொரு நாளும் மக்கள் புதிதாக ஏதாவது கற்றுக் கொள்வதற்காக யூடியூப்பிற்கு வருகின்றார்கள். அதாவது புதிய தகவல்களை கொண்டு வாழ்வை வளமாக்குகின்றனர். அதில் 93 சதவிகிதம் பார்வையாளர்கள் youtube-ஐ தகவல் சேகரிப்பிற்காக பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது. அதனால் விளம்பரங்கள் போன்ற இடையூறு இல்லாமல் கல்வி வீடியோக்களை வழங்குவதற்காக புதிய அம்சத்தை கொண்டு வர யூடியூப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவில் சில கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. மேலும் கல்வி சார்ந்த ஆழமான வீடியோக்கள் அடங்கிய கோர்ஸ் களையும் youtube அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த இருக்கின்றது. இந்த கோர்ஸ் வாங்குபவர்கள் விளம்பரம் இல்லாமல் கல்வி வீடியோக்களை பார்த்துக் கொள்ளலாம். மேலும் பேக்ரவுண்ட் பிளேவர் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் குயிஸ் வசதியும் அறிமுகம் ஆகிறது. அதாவது ஒரு விஷயத்தை கற்றபின் அது சார்ந்த கேள்வி பதில்கள் வாயிலாக தங்களது கற்றல்களை பரிசோதிக்கவும் குயிஸ் உதவுகிறது.

Categories

Tech |