டேபிள் டென்னிஸ், லான் டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து போன்ற நான்கு விளையாட்டுகளையும் உள்ளடக்கிய ராக்கெத்லான் சாம் பியன்ஷிப் 2022 வருடத்திற்கான போட்டி ஆசிய நாட்டில் நடைபெற்றுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றைய இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி சார்பாக கோவை சூலூர் பகுதியில் சேர்ந்த எம் டி என் ஃபியூச்சர் பள்ளியில் பயிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் ஆதித்யன், தம்பி ஆதிரை போன்றோர் இந்திய அணியில் இடம் பிடித்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதே போல கோவையைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற மாணவன் உட்பட சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் கோவை சூலூர் எம் டி என் பள்ளி வீராங்கனை ஆதிரை 16 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
இதனை அடுத்து கலப்பு இரட்டையர் பிரிவில் அதே பள்ளியில் பயிலும் இவரது அண்ணன் ஆதித், தங்கை ஆதிரையுடன் ஜோடியாக விளையாடி ஒரு தங்கம் மற்றும் ஓபன் கலப்பு ரெட்டையில் பிரிவில் ஆதிரை மற்றும் ஆதர் ஜோடி ஒரு தங்கம் என பதக்கங்களை வென்றுள்ளனர். இந்திய அணி சார்பாக மொத்தம் ஒன்பது வீரர்கள் கலந்து கொண்டதில் தமிழகத்தைச் சேர்ந்த அதிலும் குறிப்பாக கோவையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி வென்றுள்ள நிலையில் கோவை விமான நிலையம் வந்த ஆதித் மற்றும் ஆதிரை போன்றவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பேசும்போது கடின பயிற்சி மற்றும் முயற்சியின் காரணமாக இந்த இலக்கை அடைய முடிந்ததாக தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தங்க வென்று சர்வதேச அளவில் கோவைக்கு பெருமை சேர்த்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.