காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அல்வார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று (டிச.19) உரையாற்றினார்.
அப்போது, ராஜஸ்தானில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். மேலும் அவர்கள் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.